வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

சென்னை சந்தோம் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
x
வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நவம்பர் 2ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும், இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம் குடியிருப்பு வாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்