முதல்முறையாக கீழடியில் முதலமைச்சர் - அமைச்சர்களுடன் முதலமைச்சர் நேரடி ஆய்வு
முதல்முறையாக கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஆய்வுப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய மாநில அரசுகள் சார்பாக 7 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. முதன்முறையாக முதலமைச்சரான பிறகு கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட குழிகள், சுடுமண் பொம்மைகள், உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள், தங்கத்திலான வளையல், கற்கோடாரி , தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், எலும்புக் கூடுகள், பகடைக்காய் உள்பட பல பொருட்களை ஸ்டாலின் பார்வையிட்டார். இவருடன் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் , பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி உடனிருந்தனர் . மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு தொல்லியல் துறையினர் இப்பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர்.
Next Story