துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக போராடுவதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
கடைநிலையிலுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக பலம் வாய்ந்த அரசு போராடுவதா? என, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய 4 பேர் 2006 ஜூன் 23-ஆம் தேதி நிரந்தரமாக்கப்பட்டனர்.
ஒப்பந்த பணி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த தேதியிலிருந்து நிரந்தர பணியை கணக்கிட வேண்டும் என தெரிவித்து, அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதற்கெதிராக போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி,ஆர். கவாய் அமர்வு இன்று விசாரித்தது.அப்போது, துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை வந்து, பலம் வாய்ந்த அரசு மேல்முறையீடு செய்வதா? என கேள்வி எழுப்பினர்.உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞரை நியமித்து வாதிடுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியும்தானே? என்றும்,இளம் வழக்குரைஞர்கள் கூட எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் என்பதும் தெரியும்தானே? என சரமாரி கேள்வி எழுப்பினர்.இந்த வழக்கில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆதரவாக வாதாட உள்ள வழக்குரைஞர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயை மாநில அரசு செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
Next Story