பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
x
பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பட்டாசுக்கு தடை கோரிய மனுவும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்கக்கோரிய, உற்பத்தியாளர்கள் மனுக்களும், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிமுறை மீறலும் இல்லாமல்,
பசுமை பட்டாசு தயாரிக்கிறோம் என்றும், எனவே பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது என்று, உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுகிட்ட நீதிபதிகள், பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக கூறினார்.உற்சாகத்துக்காக பட்டாசு வெடித்து, சுற்று சூழலை பாதித்து, மக்களின் உடல் நலனை பாதிப்பதை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே நீதிமன்றம் உள்ளது என தெரிவித்தனர். ஒருவேளை தயாரிப்பு இல்லை என்றால், பட்டாசு வெடிக்க தோன்றாதே என நீதிபதிகள் கருத்து தெரிவித்த நிலையில், விசாரணையை  ஒத்திவைத்தனர்.Next Story

மேலும் செய்திகள்