பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான மனுவை ஏற்கனவே விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சிக்கு மாற்றுமாறும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்