டீ குடித்துக் கொண்டிருந்த போது ரூ.40 ஆயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் விசாரணை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே தேநீர் அருந்திக் கொண்டிருந்தவரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீ குடித்துக் கொண்டிருந்த போது ரூ.40 ஆயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் விசாரணை
x
ஜெயராமன் நகரைச் சேர்ந்த முத்து பெங்களுரில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவளி செலவுக்காக வங்கியில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த முன் பக்க பையில் வைத்து விட்டு முத்து டீ குடித்துக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்க்கையில், பணம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்