குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொல்லை: காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக்கல் டிஐஜி உத்தரவு

பழனி அருகே குறுஞ்செய்தி மூலம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக்கல் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொல்லை: காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக்கல் டிஐஜி உத்தரவு
x
கீரனூர் காவல்நிலைய ஆய்வாளர் வீரகாந்தி, அவருடன் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து  திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான குழு கீரனூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்து, பெண் காவலரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதைதொடர்ந்து, பழனி மகளிர் காவல் நிலையத்தில் கீரனூர் காவல் ஆய்வாளர் வீர காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்