ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தம்பதி - இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிய தம்பதி மீட்கப்பட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து இரண்டாயிரத்து 265 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனிடையே, தடுப்பணையில் அமர்ந்திருந்த தம்பதி, தண்ணீர் வருவதை அறிந்து, கரைக்கு திரும்ப முயன்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையறிந்த ஆழியாறு பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவர், இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தார்.
Next Story