வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் - அதிகாரிகள் பறிமுதல்

நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் - அதிகாரிகள் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது  நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் குண்டபாலம் என்ற கிராமத்திற்கு கொண்ட செல்லவிருந்த பார்சல்களை சோதனை செய்தனர். அதில் 120க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அதேப்போல அமெரிக்கா,  ஸ்பெயின்  போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரகளையும்  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்