பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பதிவு : அக்டோபர் 27, 2021, 01:29 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அங்குள்ள பட்டாசு கடையில் , திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகே உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. இதில் அருகே இருந்த பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் இருந்த சுமார் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

2 views

"மக்கள் விரும்பினால் கிராமப்புற சாலைகள் விரிவு படுத்தப்படும்" - அமைச்சர் முத்துசாமி

கிராமப்புற பொதுமக்கள் தங்களது பட்டாவுடன் ஒருங்கிணைந்து வந்தால் மாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

9 views

சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

8 views

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.