மகள் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை முயற்சி; தாய் இறப்பு- தந்தை, அண்ணனுக்கு சிகிச்சை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்திய தாய் உயிரிழந்தார். அண்ணன், தந்தை இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.
மகள் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை முயற்சி; தாய் இறப்பு- தந்தை, அண்ணனுக்கு சிகிச்சை
x
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்திய தாய் உயிரிழந்தார். அண்ணன், தந்தை இருவரும் சிகிச்சையில் உள்ளனர். அணைக்கட்டு அடுத்த தானப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த துரைராஜ்-சரஸ்வதி தம்பதிக்கு 31 வயதில், பூவிழிராஜா என்ற மகன் உள்ளார். அடிக்கடி உடல்நலம் குன்றிய அவரது 26 வயது மகள் பிரியங்கா, ஜனவரி மாதம் தற்கொலை செய்துள்ளார். இந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாத தாய், தந்தை மற்றும் அண்ணன் பூவிழிராஜா மூவரும், பிரியங்காவின் கல்லறைக்கு சென்று திரும்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டுள்ளனர். இதில், ப்ரியங்காவின் தாய் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தந்தை மற்றும் அண்ணன் இருவரும், கவலைக்கிடமான நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தற்கொலைக்கு முயலும் முன்னர், தங்கள் சாவுக்கு காரணம் யாரும் இல்லை என எழுதியதாக, ஒரு கடிதம் சிக்கியுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்