நிதி நிறுவன அதிபரின் வீட்டில் கொள்ளை - கொள்ளையனைத் தேடி வரும் போலீசார்
நிதி நிறுவன அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்து.
நிதி நிறுவன அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்து. கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள கவுந்தப்பாடியில் சக்தி சண்முகம் என்பவர் நிதி நிறுவனமும் மளிகைக் கடையும் நடத்தி வருகிறார். இவர் தமது வீட்டின் பின் பகுதியில் புது வீடு கட்டியுள்ளார். இரவு அனைவரும் அங்கு தங்கியிருந்த நிலையில், முன் பக்க வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணமும், இரண்டரை சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் சுண்ணாம்பு கலவையை பூசி மறைத்து விட்டு திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையன் உருவம் மற்றொரு காமிராவில் பதிவாகி இருந்த நிலையில், போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story