இளம்பெண்ணை கட்டி போட்டு துணிகரம் - 7 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை

திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறி தனியாக இருந்த இளம்பெண்ணின் கை கால்களை கட்டி போட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் அரங்கேறியுள்ளது.
இளம்பெண்ணை கட்டி போட்டு துணிகரம் - 7 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை
x
திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறி தனியாக இருந்த இளம்பெண்ணின் கை கால்களை கட்டி போட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் அரங்கேறியுள்ளது. 
சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கார்பெண்டர் ரவி வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி சுகுனாவும் துணி வாங்க பள்ளிக்கரணை சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த 19 வயது இளம் பெண் புஷ்பலதாவிடம், தூரத்து உறவினர்கள் என்றும் திருமண பத்திரிகை வைப்பதற்காக வந்துள்ளோம் என்றும் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்ட அந்த மர்ம நபர்கள், புஷ்ப லதா திரும்பியதும் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் நகை பணம் எங்கே இருக்கிறது என கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு, புஷ்பலதா கத்தாமல் இருக்க வாயில் துணி வைத்து அடைத்துவிட்டு, கை கால்களை கட்டி போட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்