சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில், விசாகா குழு விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை தனக்கு தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாக சுட்டிக்காட்டினார். குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரி அருண் மாற்றப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா குழு விசாரணை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story