பொறியியல் பாடத் திட்டத்தில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் பாடத் திட்டத்தில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
x
பொறியியல் பாடத்திட்டங்களை நடப்பு கல்வி ஆண்டு முதல் படிப்படியாக மாற்றி அமைப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்லும் வகையில், புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், 

Card 4

அதற்கான பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் கல்வி குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

2,3, மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு அடுத்த 8 மாதங்களில், பல்வேறு உயர் நிறுவனங்களுடைய பங்களிப்புடன்,  பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவதில், தொழில் துறையின் பங்களிப்பு 80 விழுக்காடும், பேராசிரியர்களின் பங்களிப்பு 20 விழுக்காடும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,

வரும் 25ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்