ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள்...போலீசாரையே அதிர வைத்த போதை சைக்கோ

ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள், சிகெரெட் அட்டைகள், பான்பிராக் கவர்களுக்கு மத்தியில் உறங்கி வந்த போதை சைக்கோ நபர் , தந்தையை கொன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் துணை கலெக்டரின் எம்.பி.ஏ பட்டதாரி மகன் கொலையாளியானது எப்படி...? விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள்...போலீசாரையே அதிர வைத்த போதை சைக்கோ
x
கடலூர் மாவட்டம் அனைக்குப்பம் மீனாட்சிநகரில் அரங்கேறியுள்ளது இந்த பயங்கரம்...

கார்த்திக் என்ற இளைஞர் அரசு மருத்துவமனைக்கு  சென்று தன் தந்தை இறந்துவிட்டதாகவும், அவரது உடலை வைப்பதற்கு குளிர்சாதன பெட்டி தேவை என்றும் கேட்டுள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸில் குளர்சாதன பெட்டியை ஏற்றிக்கொண்டு கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கார்த்திக் தந்தையின் உடலை கண்டதும் ஒரு நிமிடம் உறைந்துபோயினர்... 


ஆம்... கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் நிர்வாண கோலத்தில் கிடந்தார் கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணி... அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக போலீசாரை அழைத்து நடந்த சம்பவத்தை பதற்றத்துடன் விவரித்துள்ளார்.

ஆனால் நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாத‌து போல உடைந்த கண்ணாடி, அழுக்கு டி ஷர்ட் என  நின்றுகொண்டிருந்தார் கார்த்திக்...

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தகவலை கேட்ட அதிர்ச்சியிலே வந்த போலீசார், கார்த்திக்கின் அறைக்குள் சென்றதும் மேலும் அதிர்ச்சியில் உறைந்தனர்... அங்கு ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள், சிகெரெட்டுகள், பான்பிராக் கவர்கள் என போதை குடோனுக்கு நடுவே மெத்தையை போட்டு படுத்து உறங்கியுள்ளார் கார்த்திக்.... 


கொல்லப்பட்ட சுப்பிரமணி யார் என்பதை விசாரித்த போது, இத்தனை அதிர்ச்சிகளையும் தாண்டி ஒரு பேரதிர்ச்சி காத்திருந்த‌து. சுப்பிரமணியன் ஒரு முன்னாள் துணை கலெக்டர்... அவரது மனைவியும் தபால் துறையில் அதிகாரியாக இருந்திருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் காரணமாக மனைவி இறந்துவிடவே, சுப்பிரமணி தன் மகன் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து செல்லமாக வளர்த்த‌தாக தெரிகிறது. 

இதனால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி, பின்னாளில் சைக்கோவாகவே மாறிப்போன கார்த்திக்,  மது அருந்த பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் தந்தையை குத்தி கொன்றிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த‌து. 

32 வயதான இந்த கார்த்திக்கும் எம்பிஏ பட்டதாரி என்பது கூடுதல் தகவல்...

கார்த்திக் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்து தவறான பாதையில் செல்வதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் பின்னாளில் சமூகத்துக்கும், ஏன் நமக்கே கேடாய்முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.. 


Next Story

மேலும் செய்திகள்