தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி - கைது செய்த போலீசார்

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை கைப்பற்றினர்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி - கைது செய்த போலீசார்
x
தங்கச்சிமடம் விக்டோரியா நகர் உள்பட 9 இடங்களில் கடந்த 6 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, திருட முயற்சித்த ஒரு நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
அப்போது பதிவான வீடியோ காட்சிகளை வைதது, கட்டிட தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபர், கடந்த 6 மாதங்களாக திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சரவணனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணனிடம் இருந்து தங்க நெக்லஸ்,  டாலர் செயின், பிரஸ்லட்,  சிறிய  செயின், 2 ஜோடி தங்க தோடு என பத்தே கால் பவுன் நகை, 1 லேப் டாப்,  ரொக்கம் ரூ.19 ஆயிரம் ஆகியவற்றை  போலீசார் கைப்பற்றினர். 


Next Story

மேலும் செய்திகள்