ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் செய்து செயின் பறிப்பு - ஒருவர் கைது

சென்னையில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என OLX செயலில் விளம்பரம் செய்து, அதில் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் செய்து செயின் பறிப்பு - ஒருவர் கைது
x
வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என OLX செயலில் விளம்பரம் செய்து, சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு வரவழைத்து அவர்கள் அணிந்திருக்கும் செயினை பறித்துச் செல்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இது தொடர்பாக, ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இதனிடையே, ஹரி பிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,  OLX மூலம் விலை உயர்ந்த செல்போன்களை விற்பனை செய்யும் நபர்களை வரவழைத்து, செல்போனை பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுவிடுவதாக கூறினார். இதை தொடர்ந்து, அவரிடமிருந்து ஏழு சவரன் தங்க நகை, செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்