விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
x
விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்க வாய்ப்புள்ளதா என்பதற்கு பிற்பகலில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சூழலில் நவாராத்திரியின் முக்கிய நாளான விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காசிமேடு மீன் விற்பனை அங்காடியை திறக்க அனுமதி அளிக்கும் அரசு,நவராத்திரி போன்ற முக்கிய வழிபாட்டு நாட்களில் கோவில்களை திறக்க மறுப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.மேலும், விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றார்.இந்த நிலையில், விஜயதசமி அன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என்பதற்கு பிற்பகல் ஒன்றரை மணியளவில் அரசு பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்