நூதன முறையில் பெண்ணிடம் நகைபறிப்பு - காவல் ஆணையர் எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணிடம் நூதன முறையில் 10 சவரன் நகையை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நூதன முறையில் பெண்ணிடம் நகைபறிப்பு - காவல் ஆணையர் எச்சரிக்கை
x
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. இவர் செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். முகக்கவசம் ஏன் அணியவில்லை என்றும், அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்துள்ளனர். கழுத்து மற்றும் கையில் அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பையில் வைக்கும்படி மூதாட்டியிடம் கூறியுள்ளனர். இவர்களை போலீசார் என நம்பி, நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கியவர்கள், அவரது கண்முன்பே கைப்பையில் போட்டுள்ளனர். ராஜேஷ்வரி வீட்டுக்கு  வந்த கைப்பையை திறந்து பார்த்தபோது, நகை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணம், நகைகளை ஏமாற்றி பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்