கள்ள ஓட்டு விவகாரம் - சர்கார் பட பாணியில் பெண் ஒருவர் "சேலஞ்ச்" வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் பகுதியில் சர்கார் பட பாணியில் பெண் வாக்காளர் சேலஞ்ச் வாக்கு செலுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
கள்ள ஓட்டு விவகாரம் - சர்கார் பட பாணியில் பெண் ஒருவர் சேலஞ்ச் வாக்குப்பதிவு
x
சர்கார் படத்தில் தேர்தலில் வாக்களிக்க வரும் விஜய்க்கு, அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போடப்பட்டதை அறிந்து நீதிமன்றம் வரை சென்று வாதாடி தனது வாக்கை செலுத்துவார்.

கிட்டத்தட்ட இதுபோன்றதொரு நிகழ்வு, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடிவாக்கம் வாக்குச்சாவடியில் அரங்கேறியுள்ளது

சர்கார் படத்தில் வருவது போன்று நீதிமன்றம் செல்லாவிட்டாலும், பறிக்கப்பட்ட ஓட்டை அதிகாரிகளிடம் முறையிட்டும், போராட்டம் நடத்தியும் பெற்றுள்ளார் வாக்காளர் பார்வதி..

உத்திரமேரூரில் கணவருடன் வசித்து வரும் இவர், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான சிங்காடிவாக்கம் வாக்கு மையத்திற்கு 6 மாத கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். வாக்காளர் அட்டையை காண்பித்த போது, ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டதாக அலுவலர்கள் கூற அதிர்ச்சியடைந்தார் பார்வதி

தனது வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டதை அறிந்த கோபத்தில், வாக்குப்பதிவு மைய அலுவலர், வேட்பாளர்களின் முகவர்களிடம் முறையிட்டுள்ளார். எந்த தீர்வும் கிடைக்காததால், சர்கார் பட பாணியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார் பார்வதி.


Next Story

மேலும் செய்திகள்