மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை
x
மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி மகாளய அமாவாசையை முன்னிட்டு தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மகாளய அமாவாசையன்று சில்வர் பீச் உள்ளிட்ட பொது இடங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இதனையடுத்து, சில்வர் பீச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அதிக அளவிலான பொதுமக்கள் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் தடையை மீறி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்