"தேர்தல் முடிவு வந்தவுடன், கூட்டுறவு சங்கம் கலைக்கப்படும்" - அமைச்சர் துரைமுருகன்

கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பதவிகள் கலைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
x
கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பதவிகள் கலைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், உள்ளாட்சி தேர்தலில் வென்றால், நாடாளுமன்ற தேர்தலில் வென்றதற்கு சமம் என்றார். நமது வெற்றி, தேர்தலில் நிற்க எதிர்க்கட்சியினர் பயப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற அவர், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .


Next Story

மேலும் செய்திகள்