ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தல்
சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக அலுவலகங்களுக்கு முன்பு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்லவன் இல்லத்தின் முன்பும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வைப்பு நிதி, ஓய்வூதிய நிலுவை தொகை, மருத்துவப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
Next Story