"அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தோல்வி பயத்தால் நிராகரிப்பு" - எடப்பாடி பழனிசாமி

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு  நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்   எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், 202 அறிவிப்புகள் நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகவும்  குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்