சி.பா.ஆதித்தனாரின் 117ஆவது பிறந்தநாள் - அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், விஜிபி குழும தலைவரும், உலக தமிழ்சங்கத்தின் நிறுவனருமான விஜி சந்தோசம், உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story