"சொன்னதைதான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம்" - முதலமைச்சர், மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு என்றைக்கும் மக்களுக்கான அரசாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சேகர் பாபு, கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிக்கோ இருதயராஜ், எழிலன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்ததாகவும், அதில், 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார்.
Next Story