பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி: ரூ.80 லட்சம் ஏமாற்றிய 4 பேர் கைது

தாம்பரத்தில், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி: ரூ.80 லட்சம் ஏமாற்றிய 4 பேர் கைது
x
தாம்பரத்தை சேர்ந்த அந்தோணியம்மாள், கற்பகம் ஆகியோர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  கற்பகத்தின் தங்கை அனிதா குடும்ப பிரச்சினையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா,  அவரது தம்பி அபு ஹசன், தங்கை ரஹமது பீவி நிஷா, அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன், ஆகியோர், அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். இவர்களது நிலையை அறிந்த அவர்கள்,  யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதால், குடும்பத்தில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால் மீண்டும் கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள், என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். எலுமிச்சைப் பழம், பூசணிக்காய், பொம்மைகள் வைத்து பூஜை செய்வது போல் செய்து,  கடந்த ஒரு ஆண்டாக, 3 லட்சம், 5 லட்சம், 7 லட்சம் என,அவ்வப்போது பணம் பறிந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்