டிக் டாக்கை தொடர்ந்து SMULE மூலம் மோசடி: மோசடி மன்னன் சிக்கியது எப்படி?
பதிவு : செப்டம்பர் 26, 2021, 10:37 AM
டிக் டாக்கை தொடர்ந்து இப்போது ஸ்மியூல் செயலியில் உள்ள இளம்பெண்களை குறிவைத்து பழகி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...
இசை ஆர்வம் கொண்டவர்கள் சங்கமிக்கும் ஒரு இடமாக இருந்தது ஸ்மியூல் செயலி... டிக் டாக் செயலியை போலவே ஸ்மியூல் செயலிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

தங்களின் இசை திறமையை வெளிப்படுத்த ஸ்மியூல் செயலியின் பக்கம் வந்த இளம்பெண்களை குறிவைத்து ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

கல்லூரி மாணவி ஒருவர், சென்னை சைபர் க்ரைம் பிரிவில் அளித்த புகார் தான் அந்த மோசடி மன்னனை சிக்க வைத்திருக்கிறது. ஸ்மியூல் செயலியில் அறிமுகமான நபர், தன்னிடம் பழகி பின்னர் தன்னை காதலிப்பதாக கூறி 17 ஆயிரம் ரூபாய் பணம், 13.5 சவரன் நகைகளை பறித்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், அந்த மோசடி மன்னன் திருமுல்லைவாயலை சேர்ந்த லோகேஷ் என தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது புகார் அளித்த கல்லூரி மாணவி உட்பட கிட்டத்தட்ட 15 பெண்களிடம்  லோகேஷ், மோசடி செய்தது தெரியவந்தது. ஸ்மியூலில் தன்னுடன் டூயட் பாடும் பெண்களிடம் நட்பாக பழகும் லோகேஷ், அவர்களின் செல்போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொள்வார்.

ஒரு கட்டத்தில் அவர்களை காதலிப்பதாக கூறும் லோகேஷ், அவசர தேவை அது இது என கூறி பணத்தை கறப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.  அவ்வாறு பணம் தராவிட்டால் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து  வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட லோகேஷின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் நிஷாந்த், விமலேஷ் என்ற பொய்யான பெயர்களில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

புதுச்சேரி மற்றும் மலேசியா வாழ் பெண்களையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லோகேஷ் +2 முடித்துவிட்ட பி.ஏ. முதலாம் ஆண்டுடன் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்

அப்பா கூலி வேலையும்,  அம்மா வீட்டு வேலையும் செய்து வரும் நிலையில் உல்லாச வாழ்க்கை வாழ பெண்களை ஏமாற்றும் வித்தையை கற்று அதை செயல்படுத்தி வந்துள்ளார், லோகேஷ்

யாரிடமும் நேரடியாக சென்று நகையோ, பணத்தையோ லோகேஷ் பெற்றது இல்லையாம்.. பணத்தை வங்கிகள் மூலமாகவும், நகைகளை கொரியர் மூலமாகவும் ஏமாந்த பெண்கள் லோகேஷூ அனுப்பி வைத்துள்ளனர்.

லோகேஷிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான லோகேஷ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற விபரம் முழுமையாக தெரியவரும்..


தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

461 views

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

14 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

13 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

9 views

பிற செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த, பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

1 views

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

10 views

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

18 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

100 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.