போலி சான்றிதழ் கொடுத்து வேட்பு மனு - நிராகரித்த தேர்தல் அலுவலர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு, உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
போலி சான்றிதழ் கொடுத்து வேட்பு மனு - நிராகரித்த தேர்தல் அலுவலர்
x
தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியின பெண்  பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் கமலவேணி என்ற ஒரே ஒரு பெண் மட்டுமே  வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கமலவேணி போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தட்டப்பாறை ஊராட்சிமன்ற  தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தேர்தல் 6 ம் தேதி நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்