வித விதமான ஹேர் ஸ்டைலில் பள்ளி வரும் மாணவர்கள் - சொந்த செலவில் முடிவெட்டி விட்ட தலைமை ஆசிரியர்

வேலூரில் வித விதமான ஹேர் ஸ்டைலில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் முடி திருத்தம் செய்து வருகிறார்.
x
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் லைன் கட்டிங், பாக்ஸ் கட்டிங் போன்ற ஹேர் ஸ்டைலுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், வேலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி வெட்டி விடுகிறார். இதுவரை சுமார் 100 மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்துள்ளதாக கூறும் அவர், இந்த செயல் மாணவர்களின் வாழ்க்கையையே அழகு படுத்தும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்