குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகள்... அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை

தமிழகத்தில் குரூப் 2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
x
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2-ஏ, குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் மூலம் பல்வேறு அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 வேளாண்மைத் துறை பணியிடங்களுக்கான தேர்வு, உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவை நடந்து உள்ளன. கொரோனா பரவல் காரணமாக மற்ற தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தேர்வுகளின் தேதி மற்றும் பணியிட விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்