சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு
x
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்