உறுதியானது அதிமுக -பாஜக கூட்டணி: விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உறுதியானது அதிமுக -பாஜக கூட்டணி: விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்
x
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில்,  பாஜகவின் வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் வெளியிடுவார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும்  பாண்டியராஜன் ஆகியோரும்,  பாஜக சார்பாக மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்