தொழிற்கல்வி படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் - தமிழக அரசு தகவல்

தொழில் கல்வியில் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும், இதனால் அரசு 250 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொழிற்கல்வி படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் - தமிழக அரசு தகவல்
x

7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சேர்க்கை ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன் மூலம் நடப்பாண்டு சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், மாணவர்கள் செலுத்திய கலந்தாய்வு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது. இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், இதர மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இ ட‌ஒதுக்கீட்டில் பயன்பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பதன் மூலம், அரசுக்கு 250 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்