அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 20, 2021, 07:04 PM
வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.இந்நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்தின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.திறந்த வெளி பகுதிகளில் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழக அரசு,மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த வழிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்,
கட்டாயம் முக கவசம் அணிவதோடு, 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்,14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது,கூட்டத்தை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா..? - பிற்பகலில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

60 views

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

32 views

மகிந்த ராஜபக்ச உடன் ஷ்ரிங்லா சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

மகிந்த ராஜபக்ச உடன் ஷ்ரிங்லா சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

21 views

பிற செய்திகள்

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - நாயை வேட்டையாடும் சிசிடிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்து நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

0 views

மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு அயனாவரம்-புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10 views

பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

15 views

பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை - அமைச்சர் ரகுபதி

10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலையில் பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

10 views

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சேதமடைந்த தரைப்பாலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

8 views

நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.