எம்.பி. பதவி - என்.ஆர்.காங்.-பாஜக இடையே இழுபறி

எம்.பி. பதவி - என்.ஆர்.காங்.-பாஜக இடையே இழுபறி
எம்.பி. பதவி - என்.ஆர்.காங்.-பாஜக இடையே இழுபறி
x
எம்.பி. பதவி - என்.ஆர்.காங்.-பாஜக இடையே இழுபறி

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்.பி., பதவிக்கு என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.புதுச்சேரி அதிமுக மாநிலங்களவை எம்.பியாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அடுத்த மாதம் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதனால், அடுத்த மாதம் 4-ம் தேதி புதுச்சேரி மாநிலங்களவை எம்.பிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், 3 சுயேட்சைகள் மட்டும் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இதுவரை வேட்புமனுவை தாக்கல் செய்யாத நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே எம்.பி. பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி பாஜகவினர், மாநிலங்களவை எம்பி பதவியை தங்களுக்கு ஒதுக்க வேமண்டுமென தீர்மானம் நிறைவேற்றி, அதனை கூட்டணி தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் வழங்கி உள்ளனர்.
அதே சமயம், என்.ஆர்.காங்கிரஸே எம்.பி. பதவிக்கு போட்டியிட வேண்டும் என பாஜக தலைமையிடம் ரங்கசாமி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.இத்தகைய பரபரப்பான சூழலில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசிய நிலையில்,புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயமும், மாநிலத்தலைவர் சாமிநாதனும் எம்.பி. பதவி தொடர்பாக பாஜக தலைவர்களிடம் பேசுவதற்கு டெல்லி புறப்பட்டு உள்ளனர்.எம்.பி. பதவி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்