"இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: "தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரம் குறித்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக முயற்சித்தும் அரசு அனுமதிக்கவில்லையென முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவ கிராமத்தில், கடற்கரை ஓரமாக இருந்த வீடுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த பகுதியை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல் அரிப்பை தவிர்க்கும் வகையில் கடற்கரையோரம் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
Next Story