நதி நீர் பங்கீடு பேச்சுவார்த்தை - தமிழக அரசு கேரளாவிடம் கோரிக்கை

நதி நீர் பங்கீடு பேச்சுவார்த்தை - தமிழக அரசு கேரளாவிடம் கோரிக்கை
நதி நீர் பங்கீடு பேச்சுவார்த்தை - தமிழக அரசு கேரளாவிடம் கோரிக்கை
x
நதி நீர் பங்கீடு பேச்சுவார்த்தை - தமிழக அரசு கேரளாவிடம் கோரிக்கை

தமிழகம்,கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம்  கட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தமிழகம் கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை சென்னை தலைமைசெயலகத்தில்  இருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது, இந்த கூட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து  ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது முல்லை பெரியார் அணை பகுதியில் உள்ள 23 மரங்களை அகற்றுவது தொடர்பாகவும், பெரியார் அணையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகுகள் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதே போல கேரளா சார்பாக பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்