பெருங்குடி குப்பைக் கிடங்கு.. 3ஆண்டுகளில் முற்றிலும் சீரமைக்க நடவடிக்கை

பெருங்குடி குப்பைக் கிடங்கு.. 3ஆண்டுகளில் முற்றிலும் சீரமைக்க நடவடிக்கை
x
பெருங்குடி குப்பைக் கிடங்கு.. 3ஆண்டுகளில் முற்றிலும் சீரமைக்க நடவடிக்கை

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கை 3 ஆண்டுகளில் முற்றிலுமாக சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், குப்பைக் கிடங்கை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பயோ மைனிங் முறைப்படி பிரித்து, மட்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பவும், மட்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயோ கேஸ் தயாரிக்கும் கருவிகளுக்கு, காய்கறி உள்ளிட்ட கழிவுகளை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கிடங்குக்கு வரும் குப்பைகளை படிப்படியாக குறைக்கவும், கழிவுகள் சேகரிக்கப்படும் பகுதிகளிலேயே அவற்றை மறுசுழற்சி செய்யவும், உரமாக்கவும் அந்தந்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்னும் 3 ஆண்டுகளில் பெருங்குடி குப்பை மேடு முற்றிலும் அகற்றப்பட்டு சமதளமாக்கப்படுவதுடன், தோராயமாக 85 ஆயிரம் சதுர மீட்டர் இடத்தை குறுகிய கால அளவில் மீட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்