நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு
நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு
x
நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு  

தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சின் நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.அதில், நமக்கு நாமே திட்டம், சென்னை மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்நிலை புனரமைப்பு, தூர்வாருதல், கரை அமைத்தல் போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்பு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பணிகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்படும் என்றும், மூன்றாம் நபரும் கண்காணிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.இந்த வழிகாட்டி நடைமுறைகளை மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு என வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்