வழக்குகள் ரத்து செய்து அரசாணை

எட்டுவழிச்சாலை, கூடங்குளம் மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வழக்குகள் ரத்து செய்து அரசாணை
x
வழக்குகள் ரத்து செய்து அரசாணை

எட்டுவழிச்சாலை, கூடங்குளம் மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.கடந்த சட்டப்பேரவையில் பேசிய முதலாமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்கள் உட்பட வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.மீத்தேன், கூடங்குளம், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் வழக்குகளை ரத்து செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகளும்,  வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 2831 வழக்குகளும்,குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான 2282 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.எட்டுவழிச்சாலை, மீத்தேன், நியுட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட 405 வழக்குகளும்,கூடங்குளம் அணு உலை போராட்டம் தொடர்பான 26 வழக்குகள் உட்பட மொத்தமாக 5570 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்