ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?

ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?
ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?
x
ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன? 

தமிழக சட்ட பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் 28 நாட்கள் நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து வேளாண் நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு  17 நாட்கள் விவாதம் நடைபெற்ற நிலையில்  134 சட்ட மன்ற உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர்.இதில் திமுக சார்பாக 69 பேரும், அதிமுக சார்பாக 28 பேரும் உறையாற்றியுள்ளனர். இந்த சட்ட பேரவை கூட்டத் தொடரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் கேள்வி நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதிகபட்சமாக திமுக சட்ட மன்ற உறுப்பினர் தாயகம் கவி 7 ஆயிரத்து 685 வினாக்கள் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து  பாமக சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி 6ஆயிரத்து 478 வினாக்கள் கொடுத்துள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அன்பில் மகேஷ்  ஆகியோர்  கேள்விகளுக்கு தலா 4 பதில்கள் அளித்துள்ளனர். சட்ட மன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் 10 புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக சட்ட பேரவை கூட்டம் 126 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்