அக். 6, 9 - ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
x
அக். 6, 9 - ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 

தமிழ்நாட்டின்  9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும் , 2ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.அக்டோபர் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும்,நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.இதற்காக, வரும் 15ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும்,23 ஆம் தேதி,வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும் என்றும், 25ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்