அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
x
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில், குறுகிய கால "மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவையில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.அதில் அரசின் முதன்மை திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் உயர்நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் பிரச்சனைகள் குறித்து இந்த குழு விரிவான ஆலோசனை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அறிக்கை அடிப்படையில், முதன்மை திட்டங்களில் கொள்கை அளவிலான மாற்றங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் முகப்பு பலகை தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்படும் எனவும் இந்த முகப்பு பலகையின் மூலம் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் என்றும் முக்கிய செயல் திறன் குறியீடுகளின் அடிப்படையில், தொடர்புடைய துறைகளின் செயல்பாடுகள் முதலமைச்சர் முகப்பு பலகை வாயிலாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில்,குறுகிய கால "மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்"  என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் அடிப்படையில், உயர்நிலையில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்