மாவட்ட ஆய்வாளர் பணியிடை நீக்கம் - கஞ்சா வழக்கு விசாரணையில் மெத்தனம்

மாவட்ட ஆய்வாளர் பணியிடை நீக்கம் - கஞ்சா வழக்கு விசாரணையில் மெத்தனம்
மாவட்ட ஆய்வாளர் பணியிடை நீக்கம் - கஞ்சா வழக்கு விசாரணையில் மெத்தனம்
x
மாவட்ட ஆய்வாளர் பணியிடை நீக்கம் - கஞ்சா வழக்கு விசாரணையில் மெத்தனம் 

வாணியம்பாடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை உரிய நேரத்தில் கைது செய்ய தவறியதால் மாஜக நிர்வாக படுகொலை செய்யப்பட்டதாக கூறி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 26ம் தேதி வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சோதனை செய்த போலீசார் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன்,  3 பேர் கைது செய்தனர். எனினும், முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட டீல் இம்தியாஸ் தப்பி ஓடிய தலைமறைவானார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை மஜக நிர்வாகி வசீம் அக்ரம் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய இருவர் கைதான போது, கஞ்சா வழக்கில் தலைமறைவாகி இருக்கும் டீல் இம்தியாஸ் கூறியதால் வசீம் அக்ரமை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் உரிய நேரத்தில் தலைமறைவாகி இருக்கும் டீல் இம்தியாஸை கைது செய்திருந்தால், வசீம் அக்ரமின் கொலையை தடுத்திருக்கலாம் என்பதால் பணியில் மெத்தனமாக இருந்த காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் டிஐஜி உத்தரவிட்டார். இதனிடையே, நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 

Next Story

மேலும் செய்திகள்