33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு
33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு
x
33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அவர், பல மசோதாக்கள், எதிர்ப்புகளுக்கிடையிலும், அமளிகளுக்கிடையிலும் நிறைவேற்றப்படும் போது, பெருவாரியாக எல்லோராலும் ஆதரிக்கப்பட்ட இந்த மசோதா இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருப்பது நியாயமற்றது என கூறியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றாமல் 2021 ஆம் ஆண்டிலும் இதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்