ஏழ்மை நிலையிலும் நேர்மை... சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் துப்புரவு தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

ஏழ்மை நிலையிலும் நேர்மை... சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் துப்புரவு தொழிலாளிக்கு குவியும் பாராட்டு
x
ஏழ்மை நிலையிலும் நேர்மை... சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் துப்புரவு தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

படுத்த படுக்கையாக இருக்கும் கணவன், பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் துப்புரவு தொழிலாளி ஒருவர், தெருவில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.சென்னை, அடையாறு கஸ்தூரிபாய் நகர் 7 வது தெருவில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருபவர் பழனியம்மாள். இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரம் கருப்பு நிற பர்ஸ் ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதில் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதையடுத்து, அங்கேயே காத்திருந்த பழனியம்மாள், சிறிது நேரத்தில் பர்சை தேடி வந்த உரிமையாளரிடம் அடையாளத்தை சரிபார்த்த பின் பர்சை ஒப்படைத்துள்ளார். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், அங்குள்ள அனைவரும் பழனியம்மாளை பாராட்டியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, பழனியம்மாளின் குடும்ப சூழல் குறித்து விசாரித்த போது, பல நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளிவந்தன. நோய்வாய்ப்பட்ட பழனியம்மாளின் கணவர், படுத்த படுக்கையாக உள்ளார்.பழனியம்மாளின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கும், ஆன்லைன் வகுப்புக்கு செல்போனும் வாங்க கூட பணமின்றி தவித்து வந்துள்ளார் பழனியம்மாள்.ஆனால், இத்தனை கஷ்டத்திலும், கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து உன்னத பெண்ணாகியுள்ளார் பழனியம்மாள்... 


Next Story

மேலும் செய்திகள்