அரசு பேருந்துகளில் போலீசார் சோதனை.. 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

அரசு பேருந்துகளில் போலீசார் சோதனை.. 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
அரசு பேருந்துகளில் போலீசார் சோதனை.. 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
x
அரசு பேருந்துகளில் போலீசார் சோதனை.. 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்  

திண்டுக்கல் அருகே அரசு பேருந்துகளில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்கள், பதிமூன்றரை கிலோ வெள்ளிக் கொலுசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் அம்மைநாயக்கனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி மற்றும் சேலத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, முருகன் என்பவர் கடத்தி வந்த 200 கிலோ குட்கா பொருட்கள், ஆந்திராவை சேர்ந்த மோகன் என்பவர் கடத்தி வந்த பதிமூன்றரை கிலோ வெள்ளிக் கொலுசு, வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு பேருந்துகளில் கடத்தல் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்