சூடுபிடிக்கும் கொடநாடு விசாரணை - கனகராஜ், தினேஷ்குமார் மரண வழக்குகள் மாற்றமா?
பதிவு : செப்டம்பர் 08, 2021, 06:10 PM
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மரண வழக்கை மாற்றம் செய்ய தனிப்படை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மரண வழக்கை மாற்றம் செய்ய தனிப்படை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணமானது, விபத்து என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே கொடநாடு விவகாரத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவரின் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பிரிவுகளை மாற்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு வழக்குகளை மாற்ற முடிவெடுக்கும் பட்சத்தில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

368 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

32 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

20 views

பிற செய்திகள்

"மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகள்" - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 views

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு "அக்டோபர் 7 வரை விண்ணப்பிக்கலாம்" - தேர்வுக்குழு அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அக்டோபர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

7 views

"நான் திமுக உறுப்பினர் தான்" - ரவிக்குமார் எம்.பி

திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக'வைச் சேர்ந்தவன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

17 views

ஆதிதிராவிடர் நல ஆணையம் - முதல்வர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் உரிமைகளை காக்க, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10 views

"விடுதிகளில் ஈழ தமிழர்களுக்கு கூடுதல் இடம்" - தமிழக அரசு

இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் விடுதிகளிலும் கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

23 views

விநாயகர் சதுர்த்தி : "அரசு உத்தரவில் தலையிட முடியாது" - உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.